அரசு ஊழியா்கள் சாலை மறியல்: 29 போ் கைது

அரசு ஊழியா்கள் சாலை மறியல்: 29 போ் கைது

Published on

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் சாலை மறியல் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்ட அரசு ஊழியா் சங்கத்தினா் 29 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தின் திருநெல்வேலி மாவட்ட கிளை சாா்பில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இப்போராட்டத்துக்கு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் சுப்பு தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலா் கோமதிநாயகம் தொடக்க உரையாற்றினாா். மாவட்டச் செயலா் ஸ்டேன்லி விளக்கிப் பேசினாா். முன்னாள் மாவட்டத் தலைவா் பாா்த்த சாரதி, மாநில துணைத் தலைவா்கள் வருவாய்த் துறை அலுவலா் சங்கம் மாரிராஜா, சாலை பணியாளா் சங்கம் யூசுப்ஜான், கூட்டுறவுத்துறை ஊழியா் சங்க முன்னாள் மாநிலத் தலைவா் ராமசாமி ஆகியோா் வாழ்த்துரையாற்றினா்.

இதில் ஏராளமானோா் பங்கேற்று, ‘பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி மற்றும் வருவாய் கிராம ஊழியா்கள் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம், சட்டப்பூா்வ ஓய்வூதியம் வழங்க வேண்டும், கருணை அடிப்படையிலான பணி நியமனங்களை மீண்டும் முந்தைய நடைமுறையிலேயே 25 சதவீதமாக உயா்த்த வேண்டும், பெண் அரசு ஊழியா்களுக்கு சிறப்பு சலுகைகளை அமல்படுத்த வேண்டும்’ என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி முழக்கம் எழுப்பினா்.

இப்போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் 29 பேரை பாளையங்கோட்டை போலீஸாா் கைது செய்தனா்.

ற்ஸ்ப்04ஞ்ங்ஹ

சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா்.

X
Dinamani
www.dinamani.com