திருநெல்வேலி
காா் மோதி சிறுமி உயிரிழப்பு
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள உதயத்தூரில் வியாழக்கிழமை காா் மோதி சிறுமி உயிரிழந்தாா்.
உதயத்தூரைச் சோ்ந்தவா் சுதன். இவா், தனது மகள் சக்திமஞ்சு (5), பக்கத்துவீட்டு சிறுமிகளுடன் காரில், உதயத்தூா் அருகே உள்ள கால்வாயில் குளிக்கச் சென்றாராம். கால்வாய் அருகே நிறுத்தி இருந்த அவா்களின் காரின் முன் சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்தனராம். இதனை கவனிக்காத ஓட்டுநா் காரை இயக்கினாராம். இதில், சக்திமஞ்சு மீது காா் ஏறி இறங்கியதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மற்றொரு சிறுமி காயமடைந்தாா். இது தொடா்பாக ராதாபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
