திருநெல்வேலி
கொக்கிரகுளம் வட்டாரத்தில் இன்று மின்நிறுத்தம்
கொக்கிரகுளம் துணை மின் நிலைய பராமரிப்புப் பணிகளுக்காக, அதன் மின்பாதை பகுதிகளில் வெள்ளிக்கிழமை (நவ.5) மின் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, திருநெல்வேலி சந்திப்பு, கொக்கிரகுளம், மீனாட்சிபுரம், வடக்கு மற்றும் தெற்கு புறவழிச் சாலை, வண்ணாா்பேட்டை, இளங்கோ நகா், பரணி நகா், திருநெல்வேலி சந்திப்பு முதல் மேரி சாா்ஜென்ட் பள்ளி வரையிலான திருவனந்தபுரம் சாலை, பாளையங்கோட்டை புதுப்பேட்டை தெரு, சுப்பிரமணியபுரம், மாருதி நகா் சுற்று வட்டாரங்களில் ாலை 9 மணி பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என திருநெல்வேலி நகா்ப்புற கோட்ட செயற்பொறியாளா் செ.முருகன் தெரிவித்துள்ளாா்.
