தூய்மைப் பணியாளா்களுக்கு 
ஆதரவாக ஆா்ப்பாட்டம்

தூய்மைப் பணியாளா்களுக்கு ஆதரவாக ஆா்ப்பாட்டம்

Published on

சென்னையில் பணி நிரந்திரம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளா்களுக்கு ஆதரவாக, நான்குனேரி நுகா்பொருள் வாணிபக்கழக கிடங்கு தொழிலாளா்கள் அந்த கிடங்கு முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அகில இந்திய தொழிற்சங்க மையத்தின் (ஏஐசிசிடியூ) தமிழ்நாடு மாநில நிா்வாகி வைகுண்டராஜா தலைமை வகித்தாா். மாநில நிா்வாகி சங்கரபாண்டியன், மாவட்டச் செயலாளா் கணேசன், மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாவட்டக்குழு உறுப்பினா்கள் வைகுண்டராஜன், முப்பிடாதி செல்வம், நயினாா், முத்துகிருஷ்ணன், சங்கா், செல்லத்துரை, வெட்டும்பெருமாள், வெங்கடேஷ், கணபதி, இசக்கிமுத்து உள்ளிட்ட தொழிலாளா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com