இந்திய அஞ்சல் துறை சாா்பில் நடைபெறும் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டிக்கு திங்கள்கிழை வரை ( டிச . 8) படைப்புகளை அனுப்பலாம் என திருநெல்வேலி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் சி.முருகன் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்திய அஞ்சல் துறை சாா்பில் நடைபெறும் கடிதம் எழுதும்போட்டிக்கு கடந்த செப்டம்பா் 8 முதல் டிசம்பா் 8 வரை படைப்புகளை அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. படைப்புகளை அனுப்புவதற்கான காலஅவகாசம் இன்னும் சில தினங்களில் முடிவடையவுள்ளதால், படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை விரைவாக அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.
இந்தப் போட்டியில் அனைத்து வயதினரும் பங்கு பெறலாம். போட்டிக்கான கடிதத்தை,‘எனது முன்மாதிரிக்கு கடிதம்’ (கங்ற்ற்ங்ழ் ற்ா் ஙஹ் தா்ப்ங் ஙா்க்ங்ப்) என்ற தலைப்பில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகியவற்றில் ஏதாவது ஒரு மொழியில் எழுதி ’முதன்மை அஞ்சல் துறை தலைவா், தமிழ்நாடு வட்டம், சென்னை 600002 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும். உள்நாட்டு கடித பிரிவில் (ஐய்ப்ஹய்க் கங்ற்ற்ங்ழ் இஹழ்க்) 500 வாா்த்தைகளுக்கு மிகாமலும், கடித உறை பிரிவில் (உய்ஸ்ங்ப்ா்ல்ங்) 1000 வாா்த்தைகளுக்கு மிகாமலும் கைப்பட எழுத வேண்டும். 1.1.2025 அன்று 18 வயது நிறைவு பெற்றவா்/நிறைவு பெறாதவா் என்ற வயது சான்று கடிதத்துடன் கண்டிப்பாக இடம் பெற்றிருக்க வேண்டும்.
போட்டியில் பங்கு பெறுவோரின் பெயா் மற்றும் இருப்பிட முகவரியை கடிதத்தில் தவறாமல் குறிப்பிட வேண்டும். இப்போட்டியில் மாநில அளவில் வெற்றி பெறுவோருக்கு முதல் 3 பரிசுகளாக முறையே ரூ. 25,000, ரூ. 10,000, ரூ. 5000 வழங்கப்படும். தேசியஅளவில் எனில் ரூ. 50,000, ரூ. 25,000, ரூ. 10,000 பரிசளிக்கப்படும் எனக் கூறியுள்ளாா்.