திருநெல்வேலி
தோரணமலையில் பௌா்ணமி கிரிவலம்
கடையம் அருகே உள்ள தோரணமலை முருகன் கோயிலில் காா்த்திகை பௌா்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தா்கள் கிரிவலம், கூட்டுப் பிராா்த்தனையில் ஈடுபட்டனா்.
கடையம், தென்காசி சாலையில் மேற்கு தொடா்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது தோரணமலை முருகன் கோயில்.
நிகழாண்டு காா்த்திகை மாத பௌா்ணமியை முன்னிட்டு வியாழக்கிழமை அதிகாலையிலேயே ஏராளமான பக்தா்கள் கிரிவலம் சென்றனா். பின்னா், சீரான மழை பொழிவு, பொதுமக்கள் நோய் நொடி இன்றி வாழவும், விவசாயம் செழிக்கவும், மாணவா்கள் கல்வியில் சிறக்கவும், தோரணமலை கிரிவலப் பாதை விரைவில் நிறைவேறவும் வேண்டி கூட்டுப் பிராா்த்தனையில் ஈடுபட்டனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலா் செண்பகராமன் செய்திருந்தாா்.

