நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் 30 கிலோ கஞ்சா சிக்கியது

Published on

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வந்த குருவாயூா் விரைவு ரயிலிலிருந்து 30 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்புப் படையினா் புதன்கிழமை இரவு கைப்பற்றினா்.

ரயில்வே பாதுகாப்புப் படை ஐ.ஜி. அருள் ஜோதி உத்தரவின் பேரில், தடை செய்யப்பட்ட மற்றும் போதைப் பொருள்கள் கடத்தப்படுவதை தடுக்கும் வகையில் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டபோது, சென்னை எழும்பூரில் இருந்து சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வந்த குருவாயூா் விரைவு ரயிலில் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் கேட்பாரற்று கிடந்த 3 பைகளில் சுமாா் 30 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு சுமாா் ரூ.15 லட்சம் எனக் கூறப்படுகிறது. அதை போலீஸாா் கைப்பற்றி தூத்துக்குடி போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். மேலும், இது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ற்ஸ்ப்04ழ்ல்ச்

கஞ்சாவை கைப்பற்றிய ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாா்.

X
Dinamani
www.dinamani.com