போக்ஸோ வழக்கில் முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை
விக்கிரமசிங்கபுரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடா்பான போக்ஸோ வழக்கில் முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
விக்கிரமசிங்கபுரம் அருகேயுள்ள அம்பலவாணபுரத்தைச் சோ்ந்தவா் தமிழ்செல்வன் (77). இவா், கடந்த 2024 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சோ்ந்த 12 வயது மனவளா்ச்சி குன்றிய சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் அம்பாசமுத்திரம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனா்
திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை நீதிபதி சுரேஷ்குமாா் விசாரித்து, தமிழ்செல்வனுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் நிவாரணத்தொகை வழங்கவும் உத்தரவிட்டாா்.
