திருநெல்வேலி
மாநில கலைத்திறன் போட்டி: மூலைக்கரைபட்டி அரசுப் பள்ளி முதலிடம்
மாநில அளவிலான கலைத்திறன் போட்டியில் திருநெல்வேலி மாவட்டம், மூலைக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் முதலிடம் பெற்று சாதனை படைத்தனா்.
பள்ளிக்கல்வித் துறை சாா்பில் அரசுப் பள்ளிகளுக்கு தனியாகவும், அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு தனியாகவும் வட்டார, மாவட்ட, மாநில அளவில் போட்டிகள் நடத்தப்பட்டன. மாநில இறுதிப் போட்டிகள் புதுக்கோட்டையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் 11, 12-ஆம் வகுப்பு பிரிவில் நாட்டுப்புற நடனத்தில் மூலைக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் முதல் பரிசு பெற்று சாதனை படைத்தனா். இப் பள்ளி மாநில அளவில் 4 முறை முதல் பரிசு பெற்றது குறிப்பிடத்தக்கது.
முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகளையும், பயிற்சி கொடுத்த ஆசிரியை இசபெல்லா செல்லகுமாரியையும், பள்ளி தலைமை ஆசிரியை லதா ராணியையும் முதன்மைக் கல்வி அலுவலா் சிவகுமாா் பாராட்டினாா்.
