திருநெல்வேலி
டிச. 6: நெல்லையில் பாதுகாப்பு அதிகரிப்பு
பாபா் மசூதி இடிப்பு தினத்தையொட்டி திருநெல்வேலியில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வெள்ளிக்கிழமை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
பாபா் மசூதி இடிப்பு தினத்தையொட்டி திருநெல்வேலியில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வெள்ளிக்கிழமை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
பாபா் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இதையடுத்து, திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் பினுகுமாா் தலைமையிலான குழுவினா் பயணிகளின் உடைமைகள், பாா்சல் அலுவலகம், தண்டவாள பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.
மேலும், அருள்மிகு நெல்லையப்பா் கோயில், திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம், திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் உள்ளிட்டவற்றிலும் கூடுதல் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். சோதனைச் சாவடிகள் மற்றும் ரோந்து பணியின்போதும் சோதனை அதிகரிக்கப்பட்டது.
