திருநெல்வேலி
டீக்கடையில் மது விற்பனை செய்த முதியவா் கைது
விக்கிரமசிங்கபுரத்தில் டீக்கடையில் மது விற்பனை செய்ததாக முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.
விக்கிரமசிங்கபுரத்தில் டீக்கடையில் மது விற்பனை செய்ததாக முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.
விக்கிரமசிங்கபுரம், கோட்டைவிளைப்பட்டி பகுதியில் உள்ள டீக்கடையில் மது விற்பனை செய்வதாக வந்த தகவலையடுத்து, விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் அக்கடையில் சோதனை நடத்தினா். அப்போது, அங்கு விற்பனைக்காக மது வைத்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, போலீஸாா், கடை உரிமையாளா் குமரேசன் (65) மீது வழக்குப் பதிந்து, கைது செய்தனா். மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனா்.