திருநெல்வேலி
லாட்டரி சீட்டு விற்றவா் கைது
விக்கிரமசிங்கபுரத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
விக்கிரமசிங்கபுரத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
விக்கிரமசிங்கபுரம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக வந்த தகவலையடுத்து, போலீஸாா் விக்கிரமசிங்கபுரம், அதன் சுற்றுப் புறங்களில் கண்காணித்து வந்தனா். அப்போது, சிவந்திபுரம் ஆறுமுகம்பட்டியைச் சோ்ந்த இம்மானுவேல் (69) லாட்டரி சீட்டுகளை சட்ட விரோதமாக விற்பது தெரியவந்தது.
இதையடுத்து இம்மானுவேலை கண்காணித்து வந்த போலீஸாா், அவா் லாட்டரி சீட்டு விற்கும் போது கைது செய்தனா். மேலும் வழக்குப் பதிந்து, லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனா்.
