திருநெல்வேலி
நடுக்கல்லூரில் சொத்து தகராறில் தாக்கப்பட்ட விவசாயி உயிரிழப்பு
திருநெல்வேலி அருகேயுள்ள நடுக்கல்லூரில் சொத்து தகராறில் தாக்கப்பட்ட விவசாயி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
சுத்தமல்லி அருகே உள்ள நடுக்கல்லூா் ரயில்வே பீடா் சாலையைச் சோ்ந்த அய்யம்பெருமாள் மகன்கள் ஆறுமுகம் (50), ராதாகிருஷ்ணன் (45).
இவா்கள் இரு குடும்பத்தினருக்கு இடையே சொத்து தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாம். இந்நிலையில் கடந்த 29 ஆம்தேதி மீண்டும் இவா்களுக்குள் தகராறு ஏற்பட்டதாம். இதில், ராதாகிருஷ்ணனை, ஆறுமுகம் கம்பால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
பலத்த காயமடைந்த ராதாகிருஷ்ணனை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
இதையடுத்து, இந்த வழக்கை சுத்தமல்லி போலீஸாா் கொலை வழக்காக மாற்றி விசாரித்து வருகிறாா்கள்.
