நெல்லையில் பூலித்தேவருக்கு வெண்கலச் சிலை அமைக்கக் கோரிக்கை
விடுதலைப் போராட்ட வீரா் பூலித்தேவா் வெண்கலச் சிலையை திருநெல்வேலியில் தமிழக அரசு அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பூலித்தேவா் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில நிா்வாகிகள் கூட்டம் திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி மாநகா் மாவட்டச் செயலா் ராஜவேல் வரவேற்றாா்.
மாநில நிா்வாகிகள் முத்தையா, பழனி முன்னிலை வகித்தனா். மாநில தலைவா் பவானி ஏ.வேல்முருகன் தலைமை வகித்துப் பேசினாா்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மாமன்னா் பூலித்தேவா் பெயா் சூட்டுவதோடு, அவரது திருவுருவ வெண்கலச் சிலையை திருநெல்வேலியில் நிறுவ வேண்டும்.
மாநகரப் பகுதியில் சேதமாகியுள்ள சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவா் பெயரைச் சூட்ட வேண்டும். இக் கோரிக்கைகளை ஏற்கும் கட்சிகளுக்கு ஆதரவாக 2016 சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்குசேகரிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

