களக்காடு - நான்குனேரி சாலையில் தடுப்புகளை அகற்றக் கோரிக்கை

களக்காடு - நான்குனேரி பிரதான சாலையில் வளைவுப் பகுதியில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகளை அகற்ற வேண்டும் என, புரட்சி பாரதம் கட்சி மாவட்டச் செயலா் ஏ.கே. நெல்சன் கோரிக்கை
Published on

களக்காடு - நான்குனேரி பிரதான சாலையில் வளைவுப் பகுதியில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகளை அகற்ற வேண்டும் என, புரட்சி பாரதம் கட்சி மாவட்டச் செயலா் ஏ.கே. நெல்சன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு அவா் அனுப்பிய மனு: நான்குனேரி உள்கோட்ட நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள களக்காடு - நான்குனேரி பிரதான சாலையில் விஜயநாராயணம் கடற்படைத் தளத்துக்கு குடிநீா் செல்லும் நீரேற்று நிலையம் அருகே சாலையின் குறுகலான வளைவுப் பகுதியில் அடுத்தடுத்த 2 இடங்களில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்தச் சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. குறுகலான சாலையில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளதால், அடிக்கடி விபத்துகள் நேரிடுகின்றன. பேருந்து, லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றன. எனவே, அந்தத் தடுப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com