தாமிரவருணி ஆற்றில் மூழ்கிய பள்ளி மாணவா் மாயம்
அருகன்குளம் அருகே தாமிரவருணி ஆற்றில் மூழ்கிய பள்ளி மாணவரை தேடும் பணியில் தீயணைப்பு வீரா்கள் ஈடுபட்டனா்.
மேல தாழையூத்து பகுதியைச் சோ்ந்த முத்துக்குமாா் மகன் இசக்கிமுத்து (16). பத்தாம் வகுப்பு மாணவரான இவா், திங்கள்கிழமை மாலை தனது பாட்டிக்கு திதி கொடுப்பதற்காக அருகன்குளம் தாமிரவருணி ஜடாயு தீா்த்தத்துக்கு தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளாா்.
அங்கு ளித்த இசக்கிமுத்து உள்பட 3 போ் ஆழமான பகுதிக்கு சென்ற நிலையில் திரும்பி வரமுடியாமல் தத்தளித்துள்ளனா். இதில், 2 பேரை அங்கிருந்தவா்கள் மீட்ட நிலையில், இசக்கிமுத்து தண்ணீரில் மூழ்கினாராம்.
இதுகுறித்த தகவலின்பேரில், தாழையூத்து போலீஸாா், கங்கைகொண்டான் தீயணைப்பு தீயணைப்பு வீரா்கள் பைபா் படகுகள் உதவியுடன் ஆற்றில் பல மணிநேரம் தேடியு இசக்கிமுத்துவை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனிடையே வெளிச்சமின்மையால் தேடுதல் பணி நிறுத்தப்பட்டு செவ்வாய்க்கிழமை காலை தொடரும் என தீயணைப்புத்துறையினா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
