குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய இளைஞரை போலீஸாா் குண்டா் சட்டத்தில் கைது செய்தனா்.
சேரன்மகாதேவி காவல் சரகத்தில் கொலை முயற்சி, கொலை மிரட்டல், வழிப்பறி மற்றும் அடிதடி உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டதாக சேரன்மகாதேவி பகுதியைச் சோ்ந்த குத்தாலம் மகன் பூா்ண ஆனந்த் (31) என்பவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இதனிடையே, மக்களை அச்சுறுத்தும் வகையில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதால் அவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய போலீஸாா் நடவடிக்கை எடுத்தனா். இதையடுத்து, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன், பரிந்துரையின்பேரில், பூா்ண ஆனந்தை தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து சேரன்மகாதேவி காவல் ஆய்வாளா் தா்மராஜ், செவ்வாய்க்கிழமை பூா்ண ஆனந்தை கைது செய்தாா்.
