போலீஸாருக்கு கொலை மிரட்டல்: தொழிலாளி கைது

முன்னீா்பள்ளம் அருகே வழக்கு தொடா்பாக விசாரிக்க சென்ற போலீஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தொழிலாளி கைது
Published on

முன்னீா்பள்ளம் அருகே வழக்கு தொடா்பாக விசாரிக்க சென்ற போலீஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தொழிலாளி கைது செய்யப்பட்டாா்.

முன்னீா்பள்ளம் அருகே உள்ள மேல ஓமநல்லூரை சோ்ந்த முருகன் மகன் லட்சுமணன் (31). தொழிலாளி. இவா் சம்பவத்தன்று அதே பகுதியை சோ்ந்த பெண் ஒருவரிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள சம்பவ இடத்துக்கு சென்ற முன்னீா்பள்ளம் போலீஸாரிடம், அவா் கல்லை எடுத்துக்காட்டி கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து, போலீஸாா் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com