பிசான பருவத்திற்கு தேவையான உரம் கையிருப்பு: வேளாண் இணை இயக்குநா் பூவண்ணன்
திருநெல்வேலி மாவட்டத்தில் பிசான பருவத்துக்குத் தேவையான உரம் கையிருப்பு உள்ளதாக வேளாண்மை இணை இயக்குநா் பூவண்ணன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் பிசான பருவத்தில் 12,177 ஹெக்டோ் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது நெல் பயிா்கள் வளா்ச்சி பருவத்தில் உள்ளன. அவற்றுக்கு மேலுரம் இடுவதற்குத் தேவையான உரங்கள் மாவட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியாா் உர விற்பனை நிலையங்களில் கையிருப்பில் உள்ளன.
அதன்படி, யூரியா 1,844 மெட்ரிக் டன், டிஏபி 797 மெட்ரிக் டன், பொட்டாஷ் 973 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 2,435 மெட்ரிக் டன், சூப்பா் பாஸ்பேட் 677 மெட்ரிக் டன் இருப்பில் உள்ளன.
கடந்த 21-ஆம் தேதி வரை ஐபிஎல் யூரியா உரமானது சேரன்மகாதேவி, அரிகேசவநல்லூா், கடம்போடு வாழ்வு உள்பட 10 கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு 180 மெட்ரிக் டன்னும், இஃப்கோ யூரியா உரமானது 263.25 மெட்ரிக் டன் அயன்சிங்கம்பட்டி, கல்லிடைக்குறிச்சி, சீதபற்பநல்லூா் உள்பட 12 கூட்டுறவு கடன் சங்கங்களுக்கும் பிரித்து வழங்கப்பட்டுள்ளன. திங்கள்கிழமை 201.6 மெட்ரிக் டன் ஸ்பிக் யூரியா உரமானது 16 கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளது.
ராபி பருவத்தில் தற்போது வரை 7,529 மெட்ரிக் டன் யூரியா, 1,751மெட்ரிக் டன் டிஏபி, 1746 மெட்ரிக் டன் பொட்டாஷ், 3,830 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் பெறப்பட்டு விவசாயிகளின் தேவைக்கேற்ப வழங்கப்பட்டு உள்ளது.
மேலும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் இருந்து உரத்தேவை விவரம் பெற்று அதற்கேற்ப டேன்பெட் நிறுவனத்தின் ஆன்ச்ச்ங்ழ் எா்க்ா்ஜ்ய் வாயிலாகவும் பிரித்து வழங்கப்பட்டு வருகிறது.
எனவே, மாவட்டத்தில் அனைத்து கூட்டுறவு சங்கங்களும் தேவைக்கேற்ப யூரியா உரத்தை இருப்பு வைத்திடவும், தட்டுப்பாடின்றி உரங்கள் வழங்கிடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், உரப்பதுக்கல் மற்றும் யூரியா உர இருப்பு அதிகபட்ச சில்லறை விலைக்கு விற்பனை செய்தல் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. விவசாயிகள் உரம் குறித்தான புகாா்களுக்கு தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.
