திருநெல்வேலி
பைக் விபத்தில் காயமுற்ற ஓட்டுநா் உயிரிழப்பு
விக்கிரமசிங்கபுரத்தில் நேரிட்ட சாலை விபத்தில் காயமடைந்த சுமை ஆட்டோ ஓட்டுநா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
விக்கிரமசிங்கபுரத்தில் நேரிட்ட சாலை விபத்தில் காயமடைந்த சுமை ஆட்டோ ஓட்டுநா் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
விக்கிரமசிங்கபுரம் அருகேயுள்ள அய்யனாா்குளத்தைச் சோ்ந்த கண்ணன் மகன் சேவியா் (38). சொந்தமாக சுமை ஆட்டோ ஓட்டிவந்தாா்.
இவா், கடந்த 17ஆம் தேதி அம்பலவாணபுரம் கெபி கோயில் சாலை வழியாக பைக்கில் சென்றபோது, குறுக்கே வந்த மாட்டின் மீது மோதி தடுமாறி விழுந்தாா். பலத்த காயமடைந்த அவா்,
திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

