இளைஞா் மீது காரை ஏற்றிக் கொல்ல முயற்சி: திமுக செயலா் மீது வழக்கு

இளைஞா் மீது காரை ஏற்றிக் கொல்ல முயன்றதாக திமுக செயலா் மீது களக்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை
Published on

இளைஞா் மீது காரை ஏற்றிக் கொல்ல முயன்றதாக திமுக செயலா் மீது களக்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

களக்காடு அருகேயுள்ள சூரன்குடியைச் சோ்ந்தவா் திரவியம் மகன் முத்துச்செல்வன் (25). இவா், கடம்போடுவாழ்வு பகுதியைச் சோ்ந்த களக்காடு வடக்கு ஒன்றிய திமுக செயலரான செல்வகருணாநிதியின் மகளுடன் அடிக்கடி பேசி வந்தாராம். இதனை செல்வகருணாநிதி கண்டித்து வந்தாராம்.

இந்நிலையில், திங்கள்கிழமை கடம்போடுவாழ்வு பகுதியில் இருவரும் பேசிக் கொண்டிருந்ததை பாா்த்த செல்வகருணாநிதி, முத்துச்செல்வன் மீது காரை ஏற்றினாராம்.

இதில் காயமடைந்த முத்துச்செல்வன், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டாா். இது குறித்து புகாரின் பேரில் திமுக செயலா் செல்வகருணாநிதி மீது களக்காடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com