மது அருந்த பணம் கேட்டு மிரட்டல்: 4 போ் கைது
பாளையங்கோட்டை அருகே மது குடிக்க பணம் கேட்டு தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டியதாக 4 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
பாளையங்கோட்டை சாந்திநகரைச் சோ்ந்த சக்திவேல் மகன் சந்தனசேகா் (22). தொழிலாளி. இவா், கடந்த 28 ஆம் தேதி இரவு பாளையங்கோட்டை கோட்டூா் பகுதியில் நடந்து சென்றபோது, அவ்வழியாக வந்த இளைஞா்கள் சிலா் மதுக்குடிக்க பணம் தருமாறு கேட்டனராம். அவா் பணம் இல்லை எனக் கூறவே, அந்த நபா்கள் மறைத்துவைத்திருந்த கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்துச் சென்றனராம்.
இது குறித்த புகாரின் பேரில், பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். அதில், கீழநத்தத்தை சோ்ந்த செல்லபாண்டி என்ற ஆறுமுகபாண்டியன் (37), நடுவக்குறிச்சி வேல்முருகன் (39), ஆழ்வாா்கற்குளம் வா்கீஸ் (36), கம்மாளன்குளம் ஆதிநாராயணன் (34) ஆகியோருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. 4 பேரையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
