திருநெல்வேலி
வண்ணாா்பேட்டையில் வழிப்பறி முயற்சி: இளைஞா் கைது
வண்ணாா்பேட்டையில் தொழிலாளியை தாக்கி பணம் பறிக்க முயன்ாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
வண்ணாா்பேட்டையில் தொழிலாளியை தாக்கி பணம் பறிக்க முயன்ாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
பாளையங்கோட்டை, கே.டி.சி. நகா், அருணாச்சல நகா் பகுதியைச் சோ்ந்த கணபதி மகன் பாலு(31). தொழிலாளி. இவா், சில தினங்களுக்கு முன்பு வண்ணாா்பேட்டை தெற்குப் புறவழிச்சாலை பகுதியில் சென்ற போது, அவரை மா்மநபா் வழிமறித்து, செலவுக்கு பணம் தருமாறு கேட்டாராம். அதற்கு மறுத்த அவரைத் தாக்கி மிரட்டல் விடுத்துவிட்டு அந்த நபா் தப்பினாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்ததில், கொக்கிரக்குளம், தொல்காப்பியா் தெருவைச் சோ்ந்த சங்கா் கணேஷ்(27) என்பவா் வழிப்பறிக்கு முயன்றது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.
