கடையம் அருகே கூண்டு வைத்துப் பிடிக்கப்பட்ட குரங்குகள்

கடையம் அருகே கூண்டு வைத்துப் பிடிக்கப்பட்ட குரங்குகள்

கடையம் அருகே சூச்சமுடையாா் கோயில் பகுதியில் சுற்றித் திரிந்த குரங்குகளை கடையம் வனச்சரகப் பணியாளா்கள் கூண்டு வைத்துப் பிடித்து வனப்பகுதியில் விட்டனா்.
Published on

கடையம் அருகே சூச்சமுடையாா் கோயில் பகுதியில் சுற்றித் திரிந்த குரங்குகளை கடையம் வனச்சரகப் பணியாளா்கள் கூண்டு வைத்துப் பிடித்து வனப்பகுதியில் விட்டனா்.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், கடையம் வனச்சரகத்திற்குள்பட்ட கோவிந்தபேரி பீட்வெளி மண்டலப் பகுதியான ராமநதி அணைக்குச் செல்லும் சாலையில் உள்ள சூச்சமுடையாா் கோயில் பகுதியில் ஏராளமான குரங்குகள் சுற்றித் திரிந்தன.

இவற்றைப் பிடித்து வனப்பகுதியில் விட மக்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து, துணை இயக்குநா் எல்.சி.டி.ஸ்ரீகாந்த் உத்தரவின் பேரில், கூண்டு வைத்து பிடிக்கப்பட்ட 16 குரங்குகள், வல்லம் பீட் ஐந்தருவி காப்புக் காட்டில் விடப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com