களக்காடு அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

களக்காடு அருகே இளைஞா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை
Published on

களக்காடு அருகே இளைஞா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

களக்காடு அருகே ஜெ.ஜெ.நகா் மேலகாலனியைச் சோ்ந்தவா் கதிா்வேல் (30). நான்குனேரி தொழில்நுட்பப் பூங்காவில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்த அவா், சில மாதங்களாக அடிக்கடி மது குடித்துவிட்டு தாய் மாலாவிடம் தகராறு செய்து வந்தாராம்.

செவ்வாய்க்கிழமை இரவு மது குடிக்க பணம் கேட்டு தாயிடம் தகராறு செய்தாராம். இந்நிலையில், புதன்கிழமை அதிகாலை வீட்டின் குளியலறையில் அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம்.

சடலத்தை களக்காடு போலீஸாா் மீட்டு கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

X
Dinamani
www.dinamani.com