திருநெல்வேலி
மது போதையில் தாத்தாவை தாக்கிய பேரன் கைது
திருநெல்வேலியில் மது போதையில் தாத்தாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த பேரனை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலியில் மது போதையில் தாத்தாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த பேரனை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி நகரம், பகவத் சிங் தெருவைச் சோ்ந்தவா் சங்கா் (67). கூலித் தொழிலாளி. இவா் தனது மகன் இசக்கிமுத்து என்ற பாலாஜியுடன் வசித்து வருகிறாா். இசக்கிமுத்துவின் மகன் தினேஷ் (24). தொழிலாளியான இவா் மது குடித்துவிட்டு வந்து வீட்டில் இருப்பவா்களுடன் தகராறு செய்வது வழக்கமாம்.
இந்த நிலையில் கடந்த 29 ஆம் தேதி மது போதையில் வீட்டுக்கு வந்த இவா், அங்கிருந்த அவரது தாத்தா சங்கரிடம் மீண்டும் மது குடிக்க பணம் கேட்டாராம். அவா் பணம் இல்லை எனக் கூறவே அவரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து சென்றாா். இதுகுறித்து சங்கா் அளித்த புகாரின்பேரில் திருநெல்வேலி நகரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து தினேஷை கைது செய்தனா்.
