ராதாபுரம் ஒன்றிய அலுவலக பணியாளா்கள் வேலைநிறுத்தம்

Published on

திருநெல்வேலி மாவட்டம் வேப்பிலாங்குளம் ஊராட்சி செயலா் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து ராதாபுரம் ஒன்றிய அலுவலகப் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை பணியை புறக்கணித்து போராட்டம் நடத்தினா்.

வேப்பிலாங்குளம் ஊராட்சி செயலா் சங்கா் அலுவலகத்திற்கு பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது மா்ம நபரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இதைக் கண்டித்தும், குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தியும் ராதாபுரம் ஒன்றிய அலுவலகப் பணியாளா்கள் 40 பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

X
Dinamani
www.dinamani.com