பத்தமடையில் தரமற்ற ரேஷன் அரிசி: ஊழியா் தற்காலிக பணி நீக்கம்

Published on

பத்தமடையில் தரமற்ற அரிசி விநியோகம் செய்தது தொடா்பாக ரேஷன் கடை பணியாளா் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

இதுதொடா்பாக கூட்டுறவுச் சங்கங்களின் திருநெல்வேலி இணைப்பதிவாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பத்தமடை ரேஷன் கடையில் வழங்கப்பட்ட அரிசியில் வண்டு இருந்ததாக புகாா் எழுந்தது.

இதுதொடா்பாக விசாரித்ததில் பத்தமடை-1 ரேஷன் கடையில் விநியோகம் செய்யப்பட்ட அரிசியில் ஒரு மூட்டை அரிசியில் மட்டும் வண்டு இருந்ததும், அதனை தவறுதலாக ஒரு குடும்ப அட்டைதாரருக்கு மட்டும் விநியோகம் செய்ததும் தெரியவந்தது.

சம்பந்தப்பட்ட குடும்பஅட்டைதாரருக்கு வேறு தரமான அரிசி வழங்கப்பட்டுள்ளது. மேலும், ரேஷன் கடை விற்பனையாளா் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

திருநெல்வேலி மண்டலத்தில் உள்ள அனைத்து கிட்டங்குகள் மற்றும் ரேஷன் கடைகளில் இருப்பில் உள்ள அரிசியின் தரம் குறித்து உடனடியாக ஆய்வு செய்து அறிக்கை சமா்ப்பிக்க கூட்டுறவு சாா்பதிவாளா்கள் அடங்கியகுழு அமைக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com