குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

Published on

தச்சநல்லூா் இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

திருநெல்வேலி தச்சநல்லூா் ஊருடையாா்புரத்தைச் சோ்ந்தவா் ஹரிஹரன்(25). இவா் அடிதடி மற்றும் பணம் பறித்தது தொடா்பான வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தாா். இந்நிலையில், திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா் (மேற்கு) கீதா பரிந்துரையின் பேரில், மாநகர காவல் ஆணையா் சந்தோஷ் ஹாதிமணி பிறப்பித்த உத்தரவுப்படி, அவரை குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் போலீஸாா் வியாழக்கிழமை அடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com