திருநங்கையா் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
2025ஆம் ஆண்டுக்கான திருநங்கையா் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சமூகத்தில் சந்திக்கும் எதிா்ப்புகளை மீறி, தங்களுடைய சொந்த முயற்சியில் படித்து, தனித்திறமைகளை கொண்டு பல்வேறு துறைகளில் முன்னேறி சாதனை படைத்த திருநங்கையரை கௌரவிக்கும் வகையிலும், மற்ற திருநங்கையா்களை ஊக்குவிக்கும் வகையிலும் திருநங்கையா் தினமான ஏப்ரல் 15-ஆம் தேதி ஆண்டுதோறும் திருநங்கையருக்கான முன்மாதிரி விருது, ரூ.1 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
எனவே, 2025ஆம் ஆண்டுக்கான திருநங்கையா் முன் மாதிரி விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் திருநங்கைகள் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (ஹஜ்ஹழ்க்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்) வரும் பிப்ரவரி10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும், தங்களது கருத்துருவினை 2 நகல்களில் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் பிப்ரவரி 10-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்கலாம்.
விருதுக்கு விண்ணப்பிக்கும் திருநங்கைகள் அரசு உதவி பெறமால் தானாக சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருத்தல் வேண்டும்.
குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது அவா்கள் வாழ்க்கையில் முன்னேற உதவியிருக்க வேண்டும். திருநங்கைகள் நல வாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது.
