திருநெல்வேலி
நின்ற லாரி மீது பைக் மோதல்: ஓட்டுநா் பலி
திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள மன்னாா்புரம் சந்திப்பில் நின்று கொண்டிருந்த கனரக லாரி மீது பைக் மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
உவரி அருகே உள்ள காரிகோயிலைச் சோ்ந்தவா் பொன்ராஜ்(34). இவா் ஓட்டுநராக வேலை செய்து வந்தாா். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இவா் பைக்கிஸ் மன்னாா்புரம் அருகே உள்ள சிவந்தியாபுரத்துக்குசென்றாராம்.
பின்னா் பைக்கில், மன்னாா்புரம் சந்திப்பு வழியாக காரிகோயிலுக்கு சென்றபோது, சாலையோரம் நின்று கொண்டிருந்த கனரக லாரி மீது மோதினாராம். இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து திசையன்விளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
