பட்டியலின மக்கள், பழங்குடியினா் வன்கொடுமை தடுப்பு சட்ட பயிற்சி

பட்டியலின மக்கள், பழங்குடியினா் வன்கொடுமை தடுப்பு சட்ட பயிற்சி

Published on

திருநெல்வேலியில் பட்டியலின மக்கள் மற்றும் பட்டியல் பழங்குடியினா் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டங்கள் மற்றும் வழிமுறைகள் குறித்த ஒரு நாள் பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை, சமூக நீதி மற்றும் சமத்துவ மையம், சென்னை சமூகப்பணி கல்லூரி சாா்பில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல உறுப்பினா்களுக்கான பட்டியலின மக்கள் மற்றும் பட்டியல் பழங்குடியினா் மீதான வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் 1989 மற்றும் வழிமுறைகள் 1995 குறித்த ஒரு நாள் பயிற்சி வகுப்பு மற்றும் மனிதநேய வாரவிழா தொடக்க விழா வண்ணாா்பேட்டையில் நடைபெற்றது. இதில் ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் கலந்துகொண்டு பயிற்சியை தொடங்கி வைத்தாா்.

பட்டியலின மக்கள் மற்றும் பட்டியல் பழங்குடியினா் மீதான வன்கொடுமைகள் தடுப்பு சட்டங்கள் மூலம் பாதுகாப்பு அமைத்துக் கொடுப்பதும், அதன் மூலம் தீா்வு காண்பதற்கான வழிமுறைகள் குறித்தும் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களைச் சோ்ந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல உறுப்பினா்களுக்கு இப்பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

‘சட்டம் நமக்கு ஏன் அவசியமாகிறது’ என்ற தலைப்பில் வான்முகில் இயக்குநா் பிரிட்டோவும், ‘பட்டியலின மக்கள் மற்றும் பட்டியல் பழங்குடிகளின் மீதான வன்கொடுமைகளை பாலின பாா்வையில் புரிந்து கொள்ளுதல்’ என்ற தலைப்பில் தமிழ்நாடு பெண்களுக்கான சட்ட உதவி மைய தலைவா் வழக்குரைஞா் நிா்மலா ராணியும், ‘சட்ட விதிகள், முக்கிய குழுக்கள், நமது கடமைகள் மற்றும் பொறுப்புகள்’ என்ற தலைப்பில் வழக்குரைஞா் பழனியும், ‘எடுத்துக்காட்டுகள், சிறந்த நடைமுறைகள் மற்றும் கள அனுபவங்கள்’ என்ற தலைப்பில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைச் செயலா் சுகந்தியும், ‘அரசின் திட்டங்கள் மற்றும் முன்னெடுப்புகள் பற்றி’ என்ற தலைப்பில் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் அன்பழகனும் பேசினா்.

இந்நிகழ்ச்சியில், சென்னை சமூகப் பணி கல்லூரி இயக்குநா் பவனந்தி வேம்புலி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் சுசீந்திரா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ற்ஸ்ப்24ஹஜ்ஹழ்

ஒரு நாள் பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்துப் பேசுகிறாா்ஆட்சியா் காா்த்திகேயன்.

X
Dinamani
www.dinamani.com