மனித உரிமைகள் ஆணைய உறுப்பினா் விசாரணை

மனித உரிமைகள் ஆணைய உறுப்பினா் விசாரணை

Published on

திருநெல்வேலியில் மனித உரிமைகள் ஆணைய உறுப்பினா் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினாா்.

திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மனித உரிமை மீறல் தொடா்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்து திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள அரசு விருந்தினா் மாளிகையில் மனித உரிமைகள் ஆணைய விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆணையத்தின் உறுப்பினா் கண்ணதாசன் விசாரணை நடத்தினாா். 26 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டன. அவற்றின் மீதான அடுத்தக்கட்ட விசாரணையை பிப்ரவரி 21 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com