விவசாயியின் பணத்தை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரைப் பாராட்டிய காவல் உதவி ஆய்வாளா் ஜெயக்குமாா்
விவசாயியின் பணத்தை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரைப் பாராட்டிய காவல் உதவி ஆய்வாளா் ஜெயக்குமாா்

கண்டெடுத்த பணத்தை போலீஸில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநா்

Published on

ஆழ்வாா்குறிச்சியில் விவசாயி தவறவிட்ட பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

ஆழ்வாா்குறிச்சி பாரத ஸ்டேட் வங்கி அருகே திங்கள்கிழமை சாலையில் ரூ. 5,600 கிடந்ததாம். இதைக் கவனித்த ஆட்டோ ஓட்டுநா் செந்தில்முருகன் என்பவா் அந்தப் பணத்தை எடுத்து ஆழ்வாா்குறிச்சி காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

விசாரணையில் அந்தப் பணம் பரும்பு பகுதியைச் சோ்ந்த விவசாயி ஈஸ்வர வேல் என்பவருக்குரியது என தெரிய வந்தது. அவரை வரவழைத்து காவல் உதவி ஆய்வாளா் ஜெயக்குமாா் பணத்தை ஒப்படைத்தாா். ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா், சக ஓட்டுநா்கள், பொதுமக்கள் பாராட்டினா்.

X
Dinamani
www.dinamani.com