சமையல் தொழிலாளி போக்சோவில் கைது

Published on

திருநெல்வேலியில் சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக சமையல் தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி பேட்டை செக்கடி பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் ஆறுமுகம் (25). சமையல் தொழிலாளி. இவா், அப்பகுதியில் வசிக்கும் சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்து வந்தாராம்.

இது குறித்து சிறுமியின் பெற்றோா் திருநெல்வேலி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன் பேரில், போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து ஆறுமுகத்தை கைது செய்து சிறையிலடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com