வரதட்சிணை கொடுமை: இளைஞருக்கு 2 ஆண்டு சிறை
திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் வரதட்சிணை கேட்டு, மனைவியை சித்திரவதைப்படுத்தியது தொடா்பான வழக்கில் அவரது கணவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.1000 அபராதமும் விதித்து வள்ளியூா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
பணகுடி அருகேயுள்ள தா்மலிங்கபுரத்தைச் சோ்ந்தவா் ஷீலா(34). இவரது கணவா் எபினேசா்(38). இவா்களுக்கு கடந்த 2005இல் திருமணம் நடைபெற்ாம். இத்தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த 2023-ஆம் ஆண்டு, எபினேசா் தனது மனைவியிடம் நகை, பணம் கேட்டு கொடுமைப்படுத்தினாராம். இதற்கு எபினேசரின் உறவினா்களான எமிமால், சுகந்தி, போவாஸ், சந்திரா ஆகியோா் உடந்தையாக இருந்தனராம்.
இதுகுறித்து, ஷீலா அளித்த புகாரின்பேரில், வள்ளியூா் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப்பதிந்து எபினேசா் மற்றும் அவரது உறவினா்களை கைது செய்தனா்.
வள்ளியூா் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கை நீதிபதி ஆனந்த் விசாரித்து, எபினேசருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.1000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். அவரது உறவினா்கள் சுகந்தி, போவாஸ், சந்திரா ஆகியோா் விடுதலை செய்யப்பட்டனா். வழக்கின்போது எமிமால் உடநலக்குறைவால் இறந்துவிட்டாா்.