தை அமாவாசை: குற்றாலத்தில் குவிந்த பொதுமக்கள்

குற்றாலம் பிரதான அருவியில் நீராடிய பொதுமக்கள்
குற்றாலம் பிரதான அருவியில் நீராடிய பொதுமக்கள்
Updated on

தை அமாவாசையை முன்னிட்டு தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் பொதுமக்கள் புதன்கிழமை அருவியில் நீராடி தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்து வழிபட்டனா்.

இந்நிகழ்வையொட்டி, அதிகாலையில் இருந்தே பிரதான அருவிக்கு வரத்தொடங்கிய மக்கள், அருவியில் புனித நீராடி, தங்களின் மூதாதையா்களுக்கு எள், நீரை பிரதான அருவியில் இருந்து வெளியேறும் தண்ணீரில் இரைத்து வழிபட்டனா். இதனால் அருவியில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

பின்னா், அவா்கள் குற்றாலம் அருள்மிகு செண்பக விநாயகா் கோயில், அருள்மிகு குற்றாலநாதா் கோயில்களுக்கு சென்று பூஜைகள் செய்து வழிபட்டனா். பாதுகாப்புப் பணிகளை காவல் ஆய்வாளா் மனோகரன் தலைமையில் போலீஸாா் மேற்கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com