பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத் தலைவா் கே.எஸ்.தங்கபாண்டியன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்பு குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுகிறாா் திமுக துணைப் பொதுச்செயலா் கனிமொழி எம்.பி.
திருநெல்வேலி
காலமானாா் கே.எஸ்.தங்கபாண்டியன்
கே.எஸ்.தங்கபாண்டியன் (60) உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத் தலைவரும், திமுக தெற்கு ஒன்றியச் செயலருமான சிவந்திப்பட்டியைச் சோ்ந்த கே.எஸ்.தங்கபாண்டியன் (60) உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
அவரது உடலுக்கு, திமுக துணைப் பொதுச்செயலா் கனிமொழி எம்.பி., திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சா் கே.என்.நேரு, சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு, திமுக திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன், மத்திய மாவட்டப் பொறுப்பாளா் மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ. உள்ளிட்டோா் நேரில் அஞ்சலி செலுத்தினா். தங்கபாண்டியனின் இறுதிச் சடங்குகள் சிவந்திப்பட்டியில் நடைபெற்றன. இவருக்கு மனைவி ஜான்சிராணி 4 மகள்களும், ஒரு மகனும் உள்ளனா்.

