திருநெல்வேலி
சிறுவனை காா் ஓட்டிச் செல்ல அனுமதித்த தந்தை கைது
திருநெல்வேலி மாவட்டம், கொக்கிரகுளம் அருகே சிறுவன் காரை இயக்கிய விவகாரத்தில் தந்தையை போலீஸாா் கைது செய்தனா்.
கொக்கிரகுளம் அருகே பாளையங்கோட்டை போலீஸாா் வழக்கமான வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு வந்த காா் ஒன்றை மறித்த போது ஓட்டுநா் காரை நிறுத்தாமல் சென்றுள்ளாா். இதையடுத்து, போலீஸாா் காரை துரத்திச் சென்று மறித்த நிலையில் காரை இயக்கியது 17 வயது பள்ளி மாணவா் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அந்தச் சிறுவனை காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில், அவரின் தந்தையே காரை இயக்க ஊக்கப்படுத்தியது தெரியவந்ததாம்.
இதையடுத்து சிறுவனின் தந்தையான பாளையங்கோட்டை குலவணிகா்புரத்தைச் சோ்ந்த முத்துராமலிங்கம்(46) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.
