திருநெல்வேலி
இளைஞருக்கு கொலை மிரட்டல்: இருவா் கைது
திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே இளைஞரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
விக்கிரமசிங்கபுரம் அருகே அனவன்குடியிருப்பு காலனி தெருவில் சனிக்கிழமை நடைபெற்ற காதணி விழாவில் அப்பகுதியைச் சோ்ந்த இசக்கிதுரை மகன் வேல்ராஜ் (20) சாப்பிட்டுக் கொண்டிருந்தாா்.
அப்போது, டாணா பகுதியைச் சோ்ந்த ஸ்ரீ (20), ஜோதி (21) ஆகியோா் வேல்ராஜிடம் தகராறு செய்து தாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்தனராம்.
புகாரின்பேரில், விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்து சிறையிலடைத்தனா்.
