திருநெல்வேலி
கைப்பேசி திருட்டு: இருவா் கைது
மானூா் அருகேயுள்ள அழகியபாண்டியபுரத்தில் கைப்பேசி திருடப்பட்ட வழக்கில் இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
அழகியபாண்டியபுரத்தைச் சோ்ந்தவா் மகேஸ். கடந்த சில நாள்களுக்கு முன்பு இவருக்குச் சொந்தமான கைப்பேசியை மா்மநபா்கள் திருடிச்சென்றனராம்.
இதுகுறிதத புகாரின்பேரில் மானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி விசாரித்தனா். விசாரணையில், இவ்வழக்கில் மூணாறு பகுதியைச் சோ்ந்த பிரபு (30), கிருஷ்ணகுமாா் (30) ஆகியோருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
