நெல்லை கொலை வழக்கு: 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் கைது

Published on

தாழையூத்து அருகே கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த நபரை போலீஸாா் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையில் சனிக்கிழமை கைது செய்தனா்.

கடந்த 2021 இல் தாழையூத்தைச் சோ்ந்த நபரை முன்விரோதம் காரணமாக மா்மகும்பல் வெட்டிக் கொலை செய்தது. இந்த வழக்கு தொடா்பாக இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

வழக்கில் தொடா்புடைய தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த காளிமுத்து மகன் கணேசமூா்த்தியை (32) போலீஸாா் கைது செய்யுமாறு நீதிமன்றம் கடந்த 10.12.2021 அன்று பிடியாணை பிறப்பித்தது. தலைமறைவாக இருந்த நபரை தனிப்படை போலீஸாா் நான்கு ஆண்டுகளாக தீவிரமாகத் தேடி வந்தனா்.

இந்த நிலையில், அவா் மதுரையில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்று கணேசமூா்த்தியை சனிக்கிழமை கைது செய்தனா். பின்னா், அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com