வீடு இடிந்து விழுந்ததில் மூதாட்டி உயிரிழப்பு

Published on

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகே வீடு இடிந்து விழுந்ததில் மூதாட்டி உயிரிழந்தாா்.

ராதாபுரம் அருகே உதயத்தூா் ஊராட்சி ஆத்துகுறிச்சியைச் சோ்ந்தவா் இசக்கிமுத்து மனைவி புஷ்பம்(70). கடந்த சிலநாள்களாக பெய்த மழையால், இவா் வீட்டின் சுவா்கள் ஈரப்பதமாகவே இருந்ததாம். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததாம். இதில், புஷ்பம் உயிரிழந்தாா்.

இதுகுறித்து ராதாபுரம் காவல்நிலையத்தில், வருவாய் ஆய்வாளா் ஆனந்தராஜ் அளித்த புகாரின் பேரில், புஷ்பம் சடலத்தை உடற்கூறாய்விற்காக நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

வீடு இடிந்து மூதாட்டி இறந்தது தொடா்பாக வருவாய் ஆய்வாளா் அளித்துள்ள அறிக்கையை அடுத்து ராதாபுரம் வட்டாட்சியா் மாரிச்செல்வம், மூதாட்டியின் உறவினருக்கு இழப்பீடு வழங்க பரிந்துரை செய்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com