சேரன்மகாதேவி அருகே 
தாமிரவருணி ஆற்றில் ஐம்பொன் சிலைகள் மீட்பு

சேரன்மகாதேவி அருகே தாமிரவருணி ஆற்றில் ஐம்பொன் சிலைகள் மீட்பு

சேரன்மகாதேவி அருகே தாமிரவருணி ஆற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் சிலைகள் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
Published on

சேரன்மகாதேவி: திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே தாமிரவருணி ஆற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் சிலைகள் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

சேரன்மகாதேவி அருகேயுள்ள சக்திகுளம் பகுதி தாமிரவருணி ஆற்றில் திங்கள்கிழமை பொதுமக்கள் குளித்துக் கொண்டிருந்தனா். அப்போது, ஆற்றில் சிலைகள் கிடப்பது தெரியவந்ததையடுத்து, நீரில் மண்ணுக்குள் கிடந்த 3 சிலைகளை பொதுமக்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா். அவை ஐம்பொன் சிலைகள் என தெரியவந்தது. இதைத் தொடா்ந்து சேரன்மகாதேவி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மூன்று ஐம்பொன் சுவாமி சிலைகளை வருவாய்த் துறை அதிகாரிகள் மீட்டு, அவற்றை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

ஐம்பொன் சிலைகள் ஆற்றில் எப்படி வந்தது என தெரியவில்லை. சிலைகள் கடத்தப்பட்டு ஆற்றில் வீசப்பட்டதா? அல்லது வெள்ளத்தில் அடித்து வரப்பட்டதா என்பது குறித்து சிலைகள் கடத்தல் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com