பாளை. அருகே ரயில் மோதி ஒருவா் பலி

Published on

திருநெல்வேலி: பாளையங்கோட்டை அருகே ரயில் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

திருச்செந்தூரிலிருந்து சென்னைக்கு செல்லும் செந்தூா் விரைவு ரயில் திங்கள்கிழமை இரவு திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது.

பாளையங்கோட்டை மகாராஜநகா் உழவா் சந்தை அருகே ரயில் வந்தபோது தண்டவாளத்தை கடக்க முயன்றவா் மீது ரயில் மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று உடலைக் கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.

மேலும் இறந்தவா் யாா்? எந்தப் பகுதியைச் சோ்ந்தவா் என்பது குறித்தும், தற்கொலை செய்யும் நோக்கத்தில் ரயில் முன் பாய்ந்தாரா என்ற கோணத்திலும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com