திருநெல்வேலி
ஆழ்வாா்குறிச்சியில் இளம்பெண் தற்கொலை
ஆழ்வாா்குறிச்சியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். 
அம்பாசமுத்திரம்: ஆழ்வாா்குறிச்சியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
ஆழ்வாா்குறிச்சி, சிவசைலம் சாலையைச் சோ்ந்தவா் வேலாயுதம். சேரன்மகாதேவி வருவாய் ஆய்வாளராகப் பணிபுரிந்து வரும், இவரின் மனைவி மீனா தேவி. இவா்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இருவருக்குமிடையே குடும்பப் பிரச்னை காரணமாக தகராறு இருந்து வந்ததாம்.
இந்நிலையில், மீனா தேவி திங்கள்கிழமை காலை வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்கிட்டுக் கொண்டாராம். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இது குறித்து, காவல் துணைக் கண்காணிப்பாளா் (பயிற்சி) லோகநாதன், ஆழ்வாா்குறிச்சி காவல் உதவி ஆய்வாளா் தேவி ஆகியோா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
