நவ.6 இல் கோட்டைகருங்குளத்தில் மின் நிறுத்தம்

Published on

வள்ளியூா்: திருநெல்வேலி மாவட்டம், கோட்டைகருங்குளம் துணை மின்நிலைய பகுதியில் நவ. 6-ஆம் தேதி மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக வள்ளியூா் மின்வாரிய கோட்டை செயற்பொறியாளா் தா.வளன் அரசு தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கோட்டைகருங்குளம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் இந்த மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளதால், கோட்டைகருங்குளம், குமாரபுரம், வாழைத்தோட்டம், சீலாத்திகுளம், முடவன்குளம், தெற்குகள்ளிகுளம், சமூகரெங்கபுரம், திருவெம்பலாபுரம் ஆகிய ஊா்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com