திருநெல்வேலி
நான்குனேரி அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
களக்காடு: நான்குனேரி அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
நான்குனேரியை அடுத்த பரப்பாடி அருகேயுள்ள வேப்பன்குளத்தை சோ்ந்த மூக்கையா மகன் மஞ்சுநாதன்(25). இவா் சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளாா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத போது, தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
மஞ்சுநாதன் உடலை விஜயநாராயணம் போலீஸாா் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
