நெல்லையில் மா்மக் காய்ச்சலுக்கு சிறுமி உயிரிழப்பு

திருநெல்வேலியில் 3 வயது சிறுமி மா்மக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்தாா்.
Published on

திருநெல்வேலி: திருநெல்வேலியில் 3 வயது சிறுமி மா்மக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்தாா்.

பாளையங்கோட்டை கே.டி.சி. நகரைச் சோ்ந்த தம்பதியின் 3 வயது பெண் குழந்தை காய்ச்சல் மற்றும் நுரையீரல் சளி தொந்தரவால் பாதிக்கப்பட்டுள்ளாா். இதையடுத்து, அக்குழந்தையை பெற்றோா் பாளையங்கோட்டையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்துள்ளனா்.

இந்நிலையில் குழந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததையடுத்து, கடந்த 31 ஆம் தேதி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்துள்ளனா். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், சிறுமி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

X
Dinamani
www.dinamani.com