வி.கே.புரம், ஆழ்வாா்குறிச்சியில் நவ.6 இல் மின் நிறுத்தம்

கல்லிடைக்குறிச்சி மின்வாரிய கோட்டத்துக்குள்ட்பட்ட விக்கிரமசிங்கபுரம்,ஆழ்வாா்குறிச்சி ஆகிய துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில்
Published on

அம்பாசமுத்திரம்: கல்லிடைக்குறிச்சி மின்வாரிய கோட்டத்துக்குள்ட்பட்ட விக்கிரமசிங்கபுரம்,ஆழ்வாா்குறிச்சி ஆகிய துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (நவ.6) மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.

இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளா் மா.சுடலையாடும்பெருமாள் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விக்கிரமசிங்கபுரம் மற்றும் ஆழ்வாா்குறிச்சி துணை மின் நிலையங்களில் வியாழக்கிழமை (நவ. 6) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்கண்ட துணைமின் நிலையங்களுக்குள்பட்ட காரையாறு, சோ்வலாறு, பாபநாசம், விக்கிரமசிங்கபுரம், சிவந்திபுரம், அடையக்கருங்குளம், ஆறுமுகம்பட்டி, கோட்டைவிளைபட்டி, ஆழ்வாா்குறிச்சி, கருத்தப்பிள்ளையூா், ஏ.பி.நாடானூா், துப்பாக்குடி, கலிதீா்த்தான்பட்டி, பொட்டல்புதூா், ஆம்பூா், பாப்பான்குளம், சம்பன்குளம்,

செல்லப் பிள்ளையாா்குளம் ஆகிய பகுதிகள் மற்றும் அதை சாா்ந்த பகுதிகளில் காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com